செந்தமிழ்சிற்பிகள்

பா.வே.மாணிக்கனார் (1871 – 1931)

பா.வே.மாணிக்கனார்

(1871 – 1931)

பா.வே.மாணிக்கநாயக்கர்  அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர் ஆவார். சென்னையில் பொறியியல் கல்வி கற்ற இவர் சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் கண்ணுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர். அறிவியற் கலைச்சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் அமைத்தவர். தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியற் சொற்களை ஆக்கிப் பயன்படுத்தியவர். ‘குவியம்’, ‘நீர்மட்டம்’, ‘கதிர்’ உள்ளிட்ட அறிவியல் சொற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழ்படுத்தி உள்ளார். தமிழ் ஒலியிலக்கணம், தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம், தமிழ் மறை விளக்கம் ஆகிய நூல்களையும் எழுதி உள்ளார்.